சிவகாசியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து இரு சிறுமிகள் உயிரிழப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சுவர் இடிந்து விழுந்து 2 சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கொங்கலாபுரத்தில் வசித்து வருபவர் ராஜாமணி - ராஜேஸ்வரி தம்பதி. ராஜேஸ்வரி காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு கமலிகா என்ற சிறுமி உள்ளார். இந்நிலையில், ராஜேஸ்வரி சகோதரியான தனலட்சுமி என்பவரின் 4 வயதான ரிஷிகா என்ற சிறுமியும் கமலிகாவும்  ராஜாமணியின் வீட்டின் முன் உள்ள கேட்டில் விளையாடிகொண்டிருந்தனர். அப்போது, கேட்டுடன் சுவர் இடிந்து சிறுமிகள் மீது விழுந்தது. இதில், 2 சிறுமிகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Night
Day