பச்சேரியில் புரட்சித்தாய் சின்னம்மா உரை - அம்மாவின் வழியில் மக்கள் பயணம்

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தாய் சின்னம்மா, பச்சேரி கிராமத்திற்கு சென்றபோது திரளான பொதுமக்களும், கழகத் தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். கிராம மக்கள் மலர்த்தூவி வரவேற்றனர். பச்சேரி கிராமத்தில் சுதந்திரப் போராட்ட  மாவீரர் வெண்ணிகாலடி நினைவு சின்னங்களுக்கு புரட்சித்தாய் சின்னம்மா மரியாதை செலுத்தினார். பச்சேரி கிராமம் முழுவதும் சாலைகளில் கோலமிட்டு புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.


பச்சேரியில் பொதுமக்கள் தங்களது பகுதிக்கு பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என புரட்சித்தாய் சின்னம்மாவிடம் தெரிவித்தனர். இது தொடர்பாக அரசிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் பகடை நினைவுச் சின்ன பகுதிக்கு வருகை தந்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித் தாய் சின்னம்மாவுக்கு  பச்சேரி கிராம மக்கள் ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பட்டாசுகள் வெடித்தும் மேள தளங்கள் முழங்கியும் சின்னம்மாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் புரட்சி தாய் சின்னம்மாவிற்கு குலவையிட்டும் மலர்கள் தூவியும் வரவேற்பு அளித்தனர். பச்சேரி கிராம சிறுவர்கள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு ரோஜாப்பூ கொடுத்து வரவேற்பு அளித்தனர்.

பச்சேரி கிராமத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரர் பகடை நினைவு சின்னத்திற்கு புரட்சித்தாய் சின்னம்மா மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.

கிராம மக்கள் குலவையிட்டும் ஆரத்தி எடுத்தும் புரட்சித்தாய் சின்னம்மாவை வரவேற்றனர். சின்னம்மாவுக்கு சிறுவர், சிறுமியர், பாடல் பாடி வரவேற்பு அளித்தனர். 

கழக நிர்வாகிகள் புரட்சித்தாய் சின்னம்மாவுக்கு வீரவாள் வழங்கினார்கள். ஒண்டிவீரனுக்கு மணிமண்டபம் கட்ட சின்னம்மாவிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பச்சேரி பகுதியில் திரளாக கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் கழக தொண்டர்களிடையே உரையாற்றிய புரட்சித்தாய் சின்னம்மா, தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கு உரிய பதிலடியை வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் தருவார்கள் என்றும் தெரிவித்தார். 

பச்சேரியில் புரட்சித்தாய் சின்னம்மா உரையாற்றிய பின்னர், கிராம மக்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.




varient
Night
Day