நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை உறுதி செய்தது தேர்தல் ஆணையம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மைக் சின்னத்துக்கு பதில் வேறு சின்னத்தை ஒதுக்க கோரிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.

வரும் மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், கட்சியின் சின்னம் தொடர்பாக பெரும் குழப்பம் நிலவி வந்தது. விவசாயி சின்னம் மறுக்கப்பட்ட நிலையில், நாம் தமிழர் கட்சிக்கும் மைக் சின்னம் ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து, தனது கட்சி வேட்பாளர்களுக்கு படகு சின்னம் ஒதுக்க கோரிய சீமான் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துவிட்டது. நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னமே ஒதுக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Night
Day