ஜெயா தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் அமல்ராஜ் மறைவு - சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஜெயா தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் அமல்ராஜ் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், ஜெயா தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் அமல்ராஜ் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார்.

அமல்ராஜ், ஜெயா தொலைக்காட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து தற்போது வரை, 25ஆண்டுகளாக ஒளிப்பதிவாளராக, மிகுந்த விசுவாசத்தோடு பணியாற்றியவர் என்றும், புரட்சித்தலைவி அம்மா மீதும், கழகத்தின் மீதும் மிகுந்த பற்று கொண்டவர் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா தெரித்துள்ளார். புரட்சித்தலைவி அம்மா சம்பந்தப்பட்ட செய்திகளை சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அமல்ராஜை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உடன் பணியாற்றிய சகபணியாளர்கள் அனைவருக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாகவும் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

Night
Day