ஜெயக்குமார் மரண வழக்கு-மேலும் ஒரு தனிப்படை அமைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கில், மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கரைச்சுத்து புதூர் பகுதியில் காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார், கடந்த 4ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அவர் இறப்பிற்கு முன்பு எழுதப்பட்டிருந்த கடிதங்கள் வெளியான நிலையில், போலீசார் 10 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆய்வாளர் சாகுல் ஹமீது தலைமையில் மேலும் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை போலீசார் ஜெயக்குமாரின் மனைவியிடமும் அவரது மகன்கள் கருத்தையா, ஜோ மார்டின் ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

varient
Night
Day