சேலம் : பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நமோடி இன்று சேலம் வருகை தருகிறார். அவரது வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபின் நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, கோவையில் நடந்த பிரம்மாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார். பின்னர், இரவு கோவையில் தங்கிய அவர், இன்று காலை கோவையில் இருந்து புறப்பட்டு கேரள மாநிலம் பாலக்காட்டுக்கு சென்றார். அங்கு காலை 11.40 மணிக்கு நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

பின்னர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதியம் சேலத்திற்கு வருகை தரும் மோடி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இதற்காக, 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பொது கூட்டம் நடைபெறும் மைதானம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

varient
Night
Day