செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ள நிலையில், நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடியிலிருந்து தற்பொழுது நீர் இருப்பு 18 புள்ளி 28 அடியாக உள்ளது.   தற்போது நீர்வரத்து ஆனது 650 கன அடியாக உயர்ந்துள்ளதால், 133 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

varient
Night
Day