சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரகம் முற்றுகை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சென்னையில் உள்ள மாநில மாற்று திறனாளிகள் ஆணையரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு பணியில் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கான 1 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்றி அரசுப்பணி வழங்காமல் உள்ள விளம்பர திமுக அரசை கண்டித்து ஐந்து நாட்களாக சென்னையில் மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக மாநில மாற்று திறனாளிகள் ஆணையரகத்தை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கை நிறைவேற்றும்படி கோஷங்களை எழுப்பினர். நாள் கணக்கில் போராட்டம் நடைபெற்ற நிலையிலும், முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து பரிசீலிக்காமல் இருப்பது வேதனையளிப்பதாகவும் வருத்தம் தெரிவித்தனர். 

varient
Night
Day