எழுத்தின் அளவு: அ+ அ- அ
சென்னை கோயம்பேட்டில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை தாக்கிய சம்பவம் தொடர்பாக 3 போக்குவரத்து காவலர்கள் தற்காலிக பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் சக்திவேல், காவலர் தினேஷ் மற்றும் அருள் ஆகிய மூன்று பேரும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த ஜனார்த்தன் என்பவர் மதுபோதையில் வந்ததாக கூறி, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு தாக்கியுள்ளனர். அதனை அங்கிருந்த பொதுமக்கள் வீடியோ எடுத்து இணைத்தளத்தில் பகிர்ந்தனா். இதையடுத்து மூன்று போக்குவரத்து காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.