சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோரை அதிரடியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களின் எதிரொலியாக காவல்துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி, சென்னை காவல் ஆணையாராக இருந்த சந்தீப் ராய் ரத்தோரை இடமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சட்டம், ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண், சென்னை காவல் ஆணையராகவும், காவல்துறை தலைமையக ஏடிஜியாக இருந்த டேவிட்சன் ஆசிர்வாதம் தமிழக சட்டம், ஒழுங்கு ஏடிஜிபியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர், காவல்துறை பயிற்சி கல்லூரி டிஜிபியாக பணி மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

Night
Day