சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் 8-வது நாளாக மறியல் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகள் சென்னை சேத்துப்பட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 8 வது நாளாக போராட்டம் தொடரும் நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தோச்சிப்பெற்றுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனத் தேர்விலிருந்து முழுமையாக விலக்களிக்க வேண்டும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பார்வை மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு நடத்தி பணி நியமனம் வழங்க வேண்டும், உதவி தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலிறுத்தினர். சாலை மறியல் காரணமாக சேத்துப்பட்டில் உள்ள டாக்டர் குருசாமி  மேம்பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Night
Day