சென்னையில் சுகாதாரத்துறை அலட்சியம் - வெறிச்சோடிய அரசு மருத்துவமனை 12-02-2024

எழுத்தின் அளவு: அ+ அ-

போதிய மருத்துவர்கள் இல்லாமல் செயல்படும் சென்னை கே.கே. நகர் புறநகர் அரசு மருத்துமனைக்கு வரக்கூடிய நோயாளிகள், வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெறிச்சோடி காணப்படும் அரசு மருத்துவமனையின் அவல நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

மருத்துவர் எப்போது வருவார் என்று தெரியாமல், மருத்துவமனையில் நோயாளிகள் காத்திருக்கும் காட்சிகள்தான் இவை...

சென்னை விருகம்பாக்கம், கே.கே. நகர், அசோக் நகர், சாலிகிராமம், நெசப்பாக்கம், ராமாபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன் பெறும் வகையில், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் ஆட்சியில் கே.கே. நகர் அரசு புறநகர் மருத்துவமனை கட்டப்பட்டது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் மருத்துவ வசதிகளை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த மருத்துவமனையில் முறையாக சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நூறு படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனைக்கு வரக்கூடிய நோயாளிகளுக்கு பெயரளவுக்கு முறையற்ற முதலுதவி அளிக்கப்பட்டு, வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் புகார் கூறப்படுகிறது.

இதனால் இந்த மருத்துவமனைக்கு சென்றால், முறையான சிகிச்சை மேற்கொள்ள மாட்டார்கள் என கருதும் பொதுமக்கள், முன்கூட்டியே வேறு மருத்துவமனைக்கு செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் இந்த மருத்துவமனை, மக்கள் நல்வாழ்வுத் துறையின் அலட்சியத்தால், மக்களுக்கு பயனில்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. 

இந்த நிலையை மாற்றி, போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி, நோய் நொடியுடன் வருபவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தொகுதியின் பொறுப்பு அமைச்சராக உள்ள விளம்பர திமுக அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கே.கே.நகர் புறநகர் அரசு மருத்துவமனைக்கு, போதிய மருத்துவர்களை நியமிப்பாரா? அல்லது விளம்பரத்திற்காக நடத்தப்படும் அரசு நிகழ்ச்சிகளுக்கு மட்டும் முன்னுரிமை கொடுப்பாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.. 

varient
Night
Day