சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.52,080-க்கு விற்பனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்துள்ளது.

ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இருக்கத்துடன் காணப்படுகிறது. சென்னையில் நேற்று சவரனுக்கு 360 ரூபாய் அதிகரித்த தங்கம் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து,  52 ஆயிரத்து 80 ரூபாய்க்கும், கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து 6 ஆயிரத்து 510 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் குறைந்து 85 ரூபாய்க்கும், கிலோவுக்கு 300 குறைந்து 85 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

Night
Day