சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது

எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.

சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்காக பொது தேர்வுகள் பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வர நடைபெற்றது. தேர்வை நாடு முழுவதிலும் இருந்து 44 லட்சம் மாணவர்கள் எழுதினார். இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் கடந்த சில நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இன்று முடிவுகள் வெளியிட்டப்பட்டது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in, results.cbse.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களது முடிவுகளை சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல், மாணவர்களை விட மாணவிகள் 5 புள்ளி 94 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மண்டலம் வாரியான தேர்ச்சி விகிதத்தில், விஜயவாடா மண்டலம் 99 புள்ளி 60 என்ற தேர்ச்சி விகிதத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதே போல், திருவனந்தபுரம் 99 புள்ளி 32 என்ற தேர்ச்சி விகிதத்தில் 2வது இடமும், சென்னை மண்டலம் 97 புள்ளி 39 என்ற தேர்ச்சி விகிதத்துடன் 3வது இடத்தை பிடித்துள்ளது. நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வில் 88 புள்ளி 39 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

Night
Day