கள்ளழகர் ஆற்றில் இறங்கும்போது தண்ணீர் பீய்ச்சுவதற்கு கட்டுப்பாடு விதித்த ஆட்சியரின் உத்தரவு ரத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின் போது  தண்ணீர் பீய்ச்சுவதற்கு கட்டுபாடுகளை விதித்த மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பராம்பரிய நடைமுறையை பாதிப்பதோடு பக்தர்களின் மனதை புண்படுத்தும் என கருதுவதால் ஆட்சியரின் உத்தரவுக்கு தடைக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கள்ளழகர் கோயிலின் பாரம்பரிய நடைமுறைகளில் ஆட்சியர், தான்தோன்றித்தனமாக உத்தரவு பிறப்பித்தது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும், கோயில் நிர்வாகத்திடமோ வல்லுனர்களிடமோ கேட்காமல் இதுபோன்ற உத்தரவுகளை போட்ட  ஆட்சியர் சங்ககீதா பதிலளிக்க உத்தரவிட்டு அவரின்  உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

Night
Day