'எத்தனை சாமி வந்ததையா..' புரட்சித்தாய் சின்னம்மா முன்பாக பாடிய பாடகர் அறிவழகன்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆங்கிலப்புத்தாண்டையொட்டி அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, சின்னத்திரை மூலம் பிரபலமான பாடகர் அறிவழகன், அவரது தாயார் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர். 

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவை, சின்னத்திரை மூலம் பிரபலமான ராமநாதபுரம் மாவட்டம் ராதானூரை சேர்ந்த பாடகர் அறிவழகன் மற்றும் அவரது தாய் கற்பகம் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்ந்தனர். தொடர்ந்து புரட்சித்தாய் சின்னம்மா முன்பாக எத்தனை சாமி வந்ததையா என்ற பாடலை பாடகர் அறிவழகன் மனமுருக பாடி மகிழ்ந்தார். அந்த பாடலை மெய்மறந்து கேட்டு ரசித்த புரட்சித்தாய் சின்னம்மா பாடலும், பாடியவிதமும் மிகவும் அருமையாக இருந்தது என்று அறிவழகனை பாராட்டினார். அப்போது புரட்சித்தாய் சின்னம்மாவை பாடகர் அறிவழகனின் தாயார் ஆனந்த கண்ணீருடன் கட்டியணைக்க, புரட்சித்தாய் சின்னம்மாவும் ஆரத்தழுவி நெகிழ்ந்தார்.

அதனைத் தொடர்ந்து பாடகர் அறிவழகனுக்கும், அவருடைய தாய்க்கும் புரட்சித்தாய் சின்னம்மா பரிசு வழங்கி சிறப்பித்தார். அப்போது தாய் கற்பகத்திடம் மகன் அறிவழகன் நன்றாக பாடுவதாகவும், மென்மேலும் வளர்ந்து பல்வேறு சாதனை படைப்பார் என்றும் கூறி புரட்சித்தாய் சின்னம்மா பாராட்டினார்.

பின்னர், ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பாடகர் அறிவழகன், புத்தாண்டில் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி என்றும் அவர் முன் பாடல் பாடியது தான் செய்த பாக்கியம் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.


Night
Day