கடலூர் : புதிய சுங்கச்சாவடிக்கு தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம் கொத்தட்டையில் அமைக்கப்பட்டுள்ள புதிய சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தனியார் பேருந்து உரிமையாளர்கள் பேருந்துகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் - நாகை இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நிறைவடையாத நிலையில், கடலூர் மாவட்டம் கொத்தட்டையில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடியில் இன்று முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர், இதுகுறித்து சுங்கச்சாவடி நிர்வாகம் பதிலளிக்காததால் இன்று பேருந்து சேவைகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

Night
Day