எழுத்தின் அளவு: அ+ அ- அ
மதுரையில் திமுக பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்த பெண்ணை, வீடியோ எடுத்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை திமுகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பல்வேறு கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்தவகையில், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் நடத்தினார். இதற்கு மக்கள் யாரும் வருகை தராததால், திமுகவினரே சரக்கு வாகனங்கள் மூலம் பொதுமக்களை பணம் கொடுத்து அழைத்து வந்தனர். அப்போது, கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் மயங்கி விழுந்துள்ளார். இதனை கண்டுக்காமல் திமுகவினர் பிரச்சாரத்தில் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இதனை வீடியோ எடுத்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை திமுகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.