இலவசப் பேருந்தில் ஏற்ற மறுத்ததாக பெண்கள் புகார்

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் மகளிர் இலவச பேருந்தில் குழந்தையுடன் ஏறிய பெண்களை, நடத்துநர் ஏற்ற மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரையிலிருந்து குற்றலாப் பகுதிக்கு இரண்டு பெண்கள் குழந்தையுடன் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பழைய குற்றால அருவி இருந்து மெயின் அருவிக்கு செல்வதற்காக அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துநர் கீழே இறங்குமாறு கூறியதோடு மட்டுமல்லாமல் அடுத்த பேருந்தில் வருமாறு அலட்சியமாக கூறியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் பேருந்தை மறித்து வாக்குவாத்தில் ஈடுபட்டனர். இவர்களை தொடர்ந்து அங்கிருந்த ஓட்டுநர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஒன்று கூடி பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Night
Day