ஆளுநருடன், ஐ.ஏ.எஸ், இந்திய வனப்பணி தேர்வுகளில் வென்ற தேர்வர்கள் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை ஐஏஎஸ் மற்றும் இந்திய வனப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்ற தேர்வர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் சந்தித்தனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது
இந்திய குடிமைப்பணி தேர்வு மற்றும் வனப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்ற தேர்வர்கள் இனி வருங்காலங்களில் தங்களது பணியில் சிறந்து விளங்க வேண்டுமென ஆளுநர் ரவி வாழ்த்து தெரிவித்தார்.

தேர்வு பெற்ற அதிகாரிகள் நாட்டுக்‍காகவும், நாட்டு மக்‍கள் வளர்ச்சிக்‍காகவும் 
உண்மையாக பாடுபட வேண்டுமென ஆளுநர் ரவி அறிவுறுத்தினார். மாறி வரும் உலகில் ஏற்படும் புதிய சவால்களை சமாளிக்‍க வசதியாக அதிகாரிகள் தொடர்ந்து புதிய திறன்களை கற்றுக்‍கொள்ள ​வேண்டும் என அறிவுறுத்தினார். இந்த நிகழ்வின்போது ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார், ஆளுநர் மாளிகை அதிகாரிகள், பணியாளர்கள் உடனிருந்தனர்.

Night
Day