ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாவையொட்டி, ஜெயா தொலைக்‍காட்சியில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள்

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை விழாவையொட்டி, ஜெயா தொலைக்‍காட்சியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

வாழ்வுக்‍கும், தொழிலுக்‍கும், கல்விக்‍கும் உதவும் ஆயுதங்களைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் கொண்டாடப்படும் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை திருநாள் தமிழகம் முழுவதும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தத் திருநாளையொட்டி, சென்னை ஈக்‍காட்டுத் தாங்கலில் உள்ள ஜெயா தொலைக்‍காட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஜெயா தொலைக்‍காட்சியின் வாகனங்கள், தொலைக்‍காட்சியின் செயல்பாட்டுக்‍கு உதவும் அனைத்து சாதனங்கள் ஆகியவற்றுக்‍கும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, பூஜைகள் நடத்தப்பட்டன. ஜெயா தொலைக்‍காட்சி குழுமத்தின் அனைத்துப் பிரிவு ஊழியர்களும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று வழிபட்டனர். 

varient
Night
Day