அவலாஞ்சி, தொட்டபெட்டா பகுதிகளில் மரம் விழுந்து போக்‍குவரத்து பாதிப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தொடர் மழை காரணமாக உதகை - அவலாஞ்சி மற்றும் தொட்டபெட்டா தும்மனட்டி நெடுஞ்சாலைகளில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கபட்டது.

உதகை நகரில் மின் கம்பிகள் மீது மரங்கள் விழுந்ததால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொட்டபெட்டா - தும்மனட்டி நெடுஞ்சாலையில் 2 மரங்கள் விழுந்ததால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதேபோல உதகையில் இருந்து அவலாஞ்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள பூங்கா பகுதியில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்ததில் மின் கம்பம் பலத்த சேதம் அடைந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மரங்களை வெட்டி அகற்றினர். மேலும் மின் கம்பங்கள் மற்றும் கம்பிகளை சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தொட்டபெட்டா - தும்மனடி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

varient
Night
Day