அயோத்தி ராமர் கோயில் திறப்பு : 'சரித்திரத்தில் இடம் பிடித்துள்ள பிரதமர் மோடி' - இளையராஜா புகழாரம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இதுவரை மொழி, இனம், கலாச்சாரம் ஆகியவற்றை சுயநலத்திற்காக பிரித்துக் கொண்டிருந்தனர் இனி அதுபோல பிரிக்க எவரையும் அனுமதிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.   அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டைய முன்னிட்டு, ஆழ்வார் பேட்டையில் உள்ள நாரத கான சபாவில், சென்னையில் அயோத்தியா நிகழ்வானது நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் கலந்து  கொண்டனர். விழாவில் பேசிய இசைஞானி இளையராஜா, இந்தியாவில் எத்தனையோ பிரதமர்கள் வந்து போயிருக்கிறார்கள், ஆனால் மோடி மட்டுமே சரித்திரத்தில் இடம் பிடித்திருக்கிறார் என தெரிவித்தார். முன்னதாக விழாவில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ராம ராஜ்ஜியத்தின் துவக்க நாள் மற்றும் அதோடு நமது கனவு நினைவான நாள் என தெரிவித்தார்.

varient
Night
Day