அன்பில் பவுண்டேஷன் வேலைவாய்ப்பு முகாமில் சர்ச்சை

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு பள்ளி மாணவர்களை வைத்து தண்ணீர் பாட்டில் கொடுக்கப்பட்ட சம்பவம் பெற்றோர் இடையே பெரும் அதிருப்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

திருவெறும்பூரில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் பவுண்டேஷன் சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பள்ளி மாணவர்களை வைத்தே  நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், டீ கொடுத்தது அங்கு வந்த பெற்றோரை கண் கலங்க வைத்தது.

இதனையடுத்து முகாமில் பதிவு செய்த மாணவர்களுக்கு மட்டுமே நோட்டு, பேனா கொடுக்கப்பட்டது. பள்ளி படிக்கும் மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு நடைபெற உள்ள நிலையில், இன்று விடுமுறை நாளிலும் படிக்க விடாமல் பள்ளிக்கு வரவழைத்து  இந்த செயலில் ஈடுபட வைத்த பெற்றோர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day