பாடகி சுசித்ரா மீது நடிகை ரீமா கல்லிங்கல் அவதூறு வழக்கு தொடர போவதாக எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கேரளாவை சேர்ந்த நடிகை ரீமா கல்லிங்கல், கொச்சியில் அமைந்துள்ள அவரது வீட்டில் போதை விருந்துகள் நடத்தியதாகவும், அதில் பல்வேறு பெண்களை பங்கேற்க செய்தாகவும் பாடகி சுசித்ரா குற்றம்சாட்டியிருந்தார். இந்த சம்பவங்களால் நடிகை ரீமாவின் எதிர்காலமே பாதிக்கப்பட்டிருந்தது என்பது குறித்தும் அவர் யூடியூப் சேனலில் பேட்டியளித்திருந்தார். மேலும், போதை விருந்து நடத்தி பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர் நடிகை ரீமா கல்லிங்கல் எனவும் சுசித்ரா கூறியிருந்தார். இதனை முற்றிலுமாக மறுத்துள்ள ரீமா கல்லிங்கல், சுசித்ரா தன் மீது அபாண்டமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர் மீது சட்டப்படி அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.

varient
Night
Day