க்ரைம்
விலை உயர்ந்த வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல்
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
கருக்கலைப்பு செய்து உயிருக்கு ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 வயது நர்சிங் கல்லூரி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அந்த மாணவி, காதலனுடனான பழக்கத்தில் கர்ப்பமாகியுள்ளார். இதையடுத்து மாணவியின் கர்ப்பத்தை கலைப்பதற்காக திருச்சி உறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு கருக்கலைப்பு செய்யப்பட்ட நிலையில் உடல் நிலை மோசமாகி, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். புகாரின் பேரில், மாணவியின் காதலன் ராம்குமார், மாணவியின் அத்தை மற்றும் கர்ப்பத்தை கலைத்த மருத்துவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சியில் வீட்டில் பதுக்கி விற்பனை செய்து வந்த விலை உயர்ந்த வெளிநாட...
பஹல்காம் தாக்குதலுக்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கண்டனம்இந்திய வம்சவா...