எழுத்தின் அளவு: அ+ அ- அ
திண்டுக்கல் அருகே நிலத்தையும், தொழிற்சாலையையும் அபகரிக்க திமுக பிரமுகர் மணிகண்டன் கொலை மிரட்டல் விடுத்ததாக, ஹலோ பிளாக் தொழிலதிபர் ரஞ்சித் குமார், குடும்பத்துடன் எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சுக்காம்பட்டி பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் குமார், ஹாலோபிளாக் தயார் செய்யும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவரது தொழிற்சாலையையும், நிலத்தையும், சேடப்பட்டியைச் சேர்ந்த, இளைஞர் அணி திமுக பொறுப்பாளராக உள்ள மணிகண்டன் அபகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் ரஞ்சித்தின் குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல் விடுத்து, வாகனங்களை மணிகண்டன் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த ரஞ்சித், தனது குடும்பத்துடன் உயிருக்கு பாதுகாப்பு கேட்டு எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்தார்.