உலகம்
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்துவங்கதேச தலைநகர் டாக்கா விமான ந?...
இஸ்ரேலுடனான பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் ஹமாஸ் படையின் கையில் தான் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 6 மாதங்களாக பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், அங்குள்ள தீவிரவாத குழுக்களை அழிப்பதே நோக்கம் எனக் கூறியுள்ளதாக தெரிவித்துள்ள ஜோ பைடன், காஸாவில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்குமாறு கூறியுள்ளோம் என்றார். இதுவரை தீவிரவாத குழுக்களை சேர்ந்த 15 பேரை தாங்கள் அழித்துவிட்டோம் என இஸ்ரேல் கூறுவதாக தெரிவிக்கும் அமெரிக்கா, அவர்கள் பணயக் கைதிகளை விடுவிக்க தயாராக இருக்கிறார்கள் என்றார். எனினும், அது ஹமாஸ் படையினரின் கையில் இருப்பதாகவும் அவர் சூசகம் தெரிவித்துள்ளார். இதனிடையே, காஸாவுக்கு அதிக உதவிகளை வழங்குவோம் என்றும் ஜோ பைடன் கூறியுள்ளார்.
டாக்கா விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்துவங்கதேச தலைநகர் டாக்கா விமான ந?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...