இங்கிலாந்து வரக்கூடிய இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இங்கிலாந்தில் பரவும் வன்முறை காரணமாக அங்கு பயணம் மேற்கொள்ளும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அந்நாட்டு இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் சவுத்போர்ட் நகரில் உள்ள நடன பள்ளியில் கடந்த 29ம் தேதி சிறுவன் ஒருவன் கத்தியால் குத்தியதில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை நடத்திய 17 வயது சிறுவன் அகதியாக இங்கிலாந்தில் நுழைந்தவர் என தகவல் பரவியது. இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகதிகளுக்கு எதிராக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில் லண்டனில் உள்ள இந்திய தூதரகம், இங்கிலாந்து வரக்கூடிய இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

varient
Night
Day