அமெரிக்காவில் 10 வயது சிறுவனை சுறா தாக்கியதால் பரபரப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவின் பஹாமாஸில் 10 வயது சிறுவன் ஒருவனை சுறா தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பஹாமாஸில் உள்ள ஓய்வு விடுதியில் வாக்கிங் வித் தி ஷார்க்ஸ் என்ற உல்லாச பயணத்தில் 10 வயது சிறுவன் ஒருவன் கலந்து கொண்டான். அப்போது, 2 சுறாக்கள் ஆக்கிரோஷமாக சிறுவனின் அருகே சுற்றியது. அப்போது, திடீரென அவனது காலை ஒரு சுறா கடித்ததில் சிறுவன் படுகாயமடைந்தான். இதனையடுத்து உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன், அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், சிறுவனை சுறா தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

varient
Night
Day