இந்தியா
தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
தனியார் விமான நிறுவனங்கள் பயனடையும் வகையில் செயல்பட்டதாக கூறி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்த பிரபுல் படேல் மீது தொடரப்பட்ட வழக்கை முடிக்கக்கோரி சி.பி.ஐ மனுத் தாக்கல் செய்துள்ளது. தேசியவாத காங்கிரசை சேர்ந்தவர் பிரபுல் படேல். இவர் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின்போது சிவில் விமானப்போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அப்போது ஏர் இந்தியா-இந்தியன் ஏர்லைன்ஸ் இணைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பிரபுல் படேல் மீது சிபிஐ 2017 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. அஜித் பவார், பிரபுல் படேல் இருவரும் 8 மாதங்களுக்கு முன் பா.ஜ.க மற்றும் ஏக்நாத் ஷிண்டே கூட்டணியில் இணைந்தனர். இந்த நிலையில் பிரபுல் படேல் மீதான வழக்கை முடித்து வைக்குமாறு கோரி டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சி.பி.ஐ-ன் கோரிக்கையை ஏப்ரல் 15-ம் தேதி பரிசீலிப்பதாக நீதிமன்றம் கூறியுள்ளது.
தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்?...
இளைஞர் அஜித் தாக்கப்படும் அதிர்ச்சி காட்சிஇளைஞர் அஜித் காவலர்களால் தாக்?...