ஜூன் 21 காரைக்கால் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் வரும் 21-ம் தேதி பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். 


பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனித் திருவிழாவை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..  காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா  மாப்பிள்ளை அழைப்பு வைபவத்துடன் தொடங்கவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான மாங்கனிகளை வாரி இறைத்து இறைவனை வழிபடும் நிகழ்வும் பவழக்கால் சப்பரத்தில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா புறப்பாடும் வரும் 21-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி அன்றைய தினம் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

Night
Day