ஜம்மு காஷ்மீரில் இருந்து பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற முடிவு - அமித்ஷா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜம்மு காஷ்மீரில் இருந்து பாதுகாப்பு படைகளை திரும்பப் பெற்று அந்த யூனியன் பிரதேசத்தின் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணிகளை ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரிடம் விட்டு விட மத்தி யஅரசு திட்டமிட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம்பேசிய அமித்ஷா, பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிதான் என்றும், அங்கு வசிக்‍கும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்துக்‍கள் இந்தியர்கள்தான் எனவும் தெரிவித்தார். இந்தியாவின் ஒரு பகுதி காஷ்மீரை சட்டவிரோதமாக பாகிஸ்தான் ஆக்‍கிரமித்துள்ளதாக அமித் ஷா குறிப்பிட்டார்.

பாகிஸ்தான் ஆக்‍கிரமிப்பு காஷ்மீரை திரும்ப பெறுவதே ஒவ்வொரு இந்தியன் மற்றும் காஷ்மீர் மக்‍களின் இலக்‍கு என்று அவர் குறிப்பிட்டார்.

Night
Day