காங்கிரஸ் தேசிய செயலாளர் அஜய் கபூர் பா.ஜ.க.வில் இணைந்தார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளராக பதவி வகித்து வந்த அஜய் கபூர் பாஜகவில் இணைந்தார். உத்தரபிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்த அஜய் கபூர், தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பிவிட்டதாக தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் குடும்பத்தில் இணைந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், தன்னை பொருத்தவரை இன்று புதிய வாழ்க்கையின் தொடக்கம் எனவும் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கான்பூர் நகர் தொகுதியில் அஜய் கபூருக்கு சீட் கொடுக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே அஜய் கபூர் காங்கிரசுக்கு ஷாக் கொடுத்து பா.ஜ.கவில் இணைந்துள்ளார். 

Night
Day