உத்தரகாண்ட் பேருந்து விபத்து - 36 பேர் உயிரிழந்ததாக தகவல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தராகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 36-ஆக உயர்ந்துள்ளது.

45 பயணிகளுடன் இன்று காலை கர்வாலில் இருந்து குமாவோனுக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, மார்ச்சுலா என்ற இடத்தில் 200 மீட்டர் பள்ளத்தாக்கில் விழுந்தது. விபத்து நடந்த இடத்தில் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, பலத்த காயமடைந்த பயணிகளை விமானத்தில் ஏற்றிச் செல்ல மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

varient
Night
Day