எழுத்தின் அளவு: அ+ அ- அ
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்ட பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்...
சோப், ஷாம்பு, பற்பசை போன்ற பொருள்கள் மீது 5% மட்டுமே வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெண்ணெய், நெய், பால் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி 12%லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
நொறுக்குத் தீனிகள் மீது 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான பால் புட்டி, நாப்கின், மருத்துவ டயப்பர்களுக்கு 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
தையல் இயந்திரம் மற்றும் அதற்கான உதிரி பாகங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சுகாதாரத் துறையில், தெர்மோமீட்டர், மருத்துவ ஆக்ஸிஜன், பரிசோதனைப் பொருள்கள், கண்ணாடி மீதான ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
டிராக்டர், அதன் டயர் மற்றும் உதிரி பாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
12 உயிரி பூச்சிக்கொல்லிகள், இயற்கை மெந்தோல் ஆகியவற்றுக்கு 12-ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும் கைவினைப்பொருட்கள், மார்பிள், கிரானைட் பிளாக், நடுத்தர தோல் பொருட்களும் 5 சதவீதமாக குறைக்கப்படுகின்றன.
பார்வையை சரிசெய்யும் கண்ணாடிகள் மற்றும் கண் கண்ணாடிகளும் 28 சதவீதத்தில் இருந்து 5 ஆக குறைக்கப்படுகின்றன.
தங்கும் விடுதிகள், சினிமா டிக்கெட்டுகளுக்கான ஜிஎஸ்டி 12%-லிருந்து 5%- ஆக குறையும்.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்ட மற்றும் உயர்த்தப்பட்ட பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்...
வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசி, டிவி மற்றும் கார் உள்ளிட்டவற்றிற்கு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக வரி குறைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ, இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28 சதவிதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
அனைத்து மோட்டார் வாகன பாகங்களுக்கு இனி 18 சதவீதமாக வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிமெண்டுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 20 முதல் 40 லட்சம் ரூபாய் விலையுள்ள மின்சார கார்களுக்கு ஜிஎஸ்டி 5% லிருந்து 18 சதவீதமாக உயருகிறது. ரூ.40 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆடம்பர மின் வாகனங்களுக்கு 40% வரி விதிக்கப்படும்.
2 ஆயிரத்து 500-க்கு அதிகமான ஆடைகளுக்கான ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் 18 சதவீதமாக உயருகிறது.
நிலக்கரி உள்ளிட்ட சில எரி பொருட்களுக்கான வரி 5 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக அதிகரிக்க உள்ளது.
மேலும் சிகரெட், பான்மசாலா, குளிர்பானங்களுக்கு 40 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. 350 சிசி திறன் மற்றும் அதற்கு மேல் உள்ள இருசக்கர வாகனங்கள், சொகுசு கார்களுக்கு 40% ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலை பார்க்கலாம்
பால், ரொட்டி, சப்பாத்தி போன்ற உணவுப் பொருள்களுக்கு என அன்றாட உபயோகப் பொருள்கள் ஜிஎஸ்டி வரி கிடையாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் துறையில் மாணவர்களுக்குத் தேவையான எழுது பொருள்கள், வரைபடங்கள், நோட்டுகள், ரப்பர், பென்சில், கிரையான்ஸ் உள்ளிட்டவற்றின் மீதான ஜிஎஸ்டி வரி முழுவதும் விலக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சுகாதாரத் துறையில், தனிநபர் ஆரோக்கியம் மற்றும் வாழ்நாள் காப்பீட்டுக்கான ஜிஎஸ்டி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 33 உயிர்காக்கும் மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி. 12 சதவீதத்தில் இருந்து பூஜ்ஜியமாக குறைந்துள்ளது. புற்றுநோய், அரியவகை நோய்கள் மற்றும் பிற கடுமையான நாள்பட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் 3 உயிர்காக்கும் மருந்துகளுக்கு 5 சதவீதத்தில் இருந்து 0 சதவீதமாகவும் குறைக்கப்படுகிறது.