சிலை கடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் மாயமான விவகாரம் - - அறிக்கை தாக்கல் செய்ய தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவு

Feb 25 2020 9:36PM
எழுத்தின் அளவு: அ + அ -
சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, தமிழக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் தொடர்பான 41 வழக்குகளின் ஆவணங்கள், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திலிருந்து மாயமானதாகவும், அதுகுறித்து நீதிமன்ற கண்காணிப்பில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியை நியமித்து விசாரணை நடத்த கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆவணங்கள் மாயமானதால் சிலைக்கடத்தல் வழக்குகளை முடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். சிலைக்கடத்தல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, ஆவணங்களை காவல்துறை அதிகாரிகள் திருடியுள்ளதாகவும், ஆவணங்கள் மாயமாகி விட்டதாக கூறி, இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிலைக்கடத்தல் வழக்குகளின் ஆவணங்கள் மாயமானது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபி மற்றும் உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 31-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4153.00 RS. 4361.00
மும்பை Rs. 3975.00 Rs. 4075.00
டெல்லி Rs. 3980.00 Rs. 4100.00
கொல்கத்தா Rs. 4009.00 Rs. 4149.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00