7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 22வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றிப் பாதைக்கு திரும்பியது. 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது. சென்னை பவுலர்கள் ஜடேஜா மற்றும் துஷார் தேஷ்பாண்டே தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 138 ரன்களை இலக்‍காக கொண்டு ஆடிய சென்னை அணி 17 புள்ளி 4 ஓவர்களில் 141 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 67 ரன்களுடனும், தோனி 1 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோல்வி அடைந்த சென்னை தற்போது வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது.

Night
Day