ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய வீரர்களான பி.வி. சிந்து, பிரனாய் தோல்வி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா அணியின் பி.வி. சிந்து, பிரனாய் தோல்வி அடைந்தனர். சீனாவில் நடைபெற்று வரும் இத்தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் ஹெச்.எஸ். பிரனாய் உலகத் தரவரிசையில் 19-வது இடத்தில் இருக்கும் தைவானின் லின் சுன்-யியை எதிர்கொண்டார். இதில் பிரனாய் 18க்கு 21, 11க்கு 21 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார். பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் பி.வி. சிந்து, சீனாவின் ஹாய் யுயி-ஐ 2-வது சுற்றில் எதிர்கொண்டார். இதில் பி.வி. சிந்து முதல் செட்டை 18க்கு 21 என இழந்தார். ஆனால் 2-வது செட்டை 21க்கு 13 என எளிதாக கைப்பற்றினார். வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டில் கடுமையாக போராடிய பி.வி. சிந்து 17க்கு 21 என தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

Night
Day