வேளாங்கண்ணியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சுற்றுலாப் பயணிகள் அச்சம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் சுற்றுலாப் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். வேளாங்கண்ணியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்திற்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனிடையே வேளாங்கண்ணி பேருந்து நிலையம், மாதாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்படும் கழிவுகளை உண்பதற்காக கால்நடைகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொள்வதால் சுற்றுலா பயணிகள் அச்சத்துடனே செல்கின்றனர். இந்த கால்நடைகள் இரவு நேரங்களில் சாலைகளின் நடுவில் படுத்து கொள்வதால் இருசக்கர வாகனங்களில் செல்வோா் இவற்றின் மீது மோதி உயிரிழக்க நேரிடுகிறது. எனவே வேளாங்கண்ணி பேரூராட்சி நிர்வாகம் கால்நடைகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day