வெற்றி துரைசாமி உடலுக்கு புரட்சித்தாய் சின்னம்மா அஞ்சலி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், மறைந்த வெற்றி துரைசாமிக்கு, அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நேரில் அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார். 

சென்னை பெருநகர மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனும், மனிதநேய அறக்கட்டளையின் இயக்குநருமான வெற்றி துரைசாமி, கடந்த 4ம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னுர் மாவட்டத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, வாகனம் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. 8 நாட்களுக்கு பிறகு வெற்றி துரைசாமியின் உடல் சட்லஜ் நதியில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின்னர், அவரது உடல் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.  சிஐடி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த வெற்றியின் உடல் மீது அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். 

சைதை துரைசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு புரட்சித்தாய் சின்னம்மா ஆறுதல் கூறினார். 
இந்த நிகழ்வில், தமிழக அரசு முன்னாள் தலைமைக் கொறடா, பி.எம்.நரசிம்மன், முன்னாள் அமைச்சர் எம்.ஆனந்தன், வேலூர் மாவட்ட கழக முன்னாள் செயலாளர் L.K.M.B. வாசு, மதுரவாயல் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஆலப்பாக்கம் ஜீவானந்தம், திருவள்ளூர் வடக்கு மாவட்ட MGR இளைஞரணி தலைவர் எல்லாபுரம் எல்.ரஜினி, முன்னாள் பரங்கிமலை ஒன்றிய கழக செயலாளர் மேடவாக்கம் S.காளிதாஸ், தென்சென்னை மாவட்ட கழக துணைச் செயலாளர் வேளச்சேரி S.சின்னதுரை, செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி எஸ்.எஸ்.சூர்யா, மறைமலைநகர் சங்கீதா, ராயபுரம் மதில் பெருமாள், குரோம்பேட்டை சக்திவேல், போயஸ்கார்டன் ஆனந்தன், மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு, மறைந்த வெற்றிதுரைசாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.


Night
Day