மின்னழுத்த கம்பி மீது கேபிள் ஒயர் பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை நெசப்பாக்கத்தில் மின்னழுத்த கம்பி மீது கேபிள் ஒயர் பட்டு மின்சாரம் தாக்கி ஊழியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த யுவராஜ் என்பவர் தனியார் கேபிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் நெசப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு கேபிள் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது கேபிள் ஓயர் அருகே இருந்த மின்னழுத்த கம்பி மீது பட்டு மின்சாரம் தாக்கி யுவராஜ் தூக்கி வீசப்பட்டார். இதனை அறிந்த அருகில் இருந்தவர்கள் யுவராஜை மீட்டு கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வந்த அவரை மேல் சிகிச்சைக்காக பெங்களூர் அழைத்து சென்ற போது மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. உடனே யுவராஜை ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

varient
Night
Day