மக்களவை தேர்தல் பிரச்சாரத்திற்காக இன்று மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி கோவை நகரில் முக்கிய இடங்களில்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் தீவிர களப்பணியாற்றி வருகிறது. இதனால், பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நாளை சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழ்நாடு வர இருக்கிறார்.

இதற்காக, இன்று மாலை 4.35 மணிக்கு கர்நாடக மாநிலம் ஷிவமொகா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பிரதமர் மோடி, மாலை 5.30 மணிக்கு கோவை சர்வதேச விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து கார் மூலம் வாகன பேரணியில் ஈடுபடும் பிரதமர் மோடி, மாலை 6.45 மணிக்கு அதனை நிறைவு செய்துவிட்டு விருந்தினர் மாளிகையில் இரவு தங்கி ஓய்வெடுக்கவுள்ளார்.

நாளை காலை மீண்டும் சாலை மார்க்கமாக விருந்தினர் மாளிகையில் இருந்து கோவை விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கு செல்கிறார். 

நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு நாளை மதியம் ஹெலிகாப்டர் மூலம் பாலக்காட்டில் இருந்து சேலம் வருகிறார். சேலத்தில் நடைபெற இருக்கும் பொது கூட்டத்தை முடித்துவிட்டு சேலம் விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி புறப்படுகிறார்.

இந்நிலையில், பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவை நகரில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 11 மணி வரை கனரக வாகனங்கள் நகருக்குள் வர போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 

Night
Day