தேர்தல் நடத்தை விதிகள் அமல் : தமிழகம் முழுவதும் ஒரே நாளில் சுமார் ரூ.2.50 கோடி பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் சுமார் இரண்டரை கோடி ரூபாயை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தேர்தல் பணிக்காக 702 பறக்கும் படைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு சட்டசபை தொகுதிக்கு 3 பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுவினர் சுழற்சி முறையில் பணியில் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை யானைக்கவுனி பகுதியில் ஒரு கோடியே 43 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னையில்  ஆட்டோவில் எடுத்து வரப்பட்ட 10 லட்ச ரூபாய், கடலுார் மாவட்டம் வேப்பூரில் 2. 52 லட்சம், நாகையில் ஒன்றரை லட்ச ரூபாய் என மாநிலம் முழுவதும் ஒரே நாளில் சுமார் 2.50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Night
Day