பிரதமர் நரேந்திர மோடிக்‍கு சின்னம்மா வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய பிரதமராக, மூன்றாவது முறையாக பொறுப்பேற்கவுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பாகவும், தமது சார்பிலும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். 

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மாவின் எக்ஸ் தள பதிவில், இந்திய பிரதமராக, மூன்றாவது முறையாக பொறுப்பேற்கவுள்ள திரு. நரேந்திர மோடி அவர்களுக்‍கு தமிழக மக்களின் சார்பாகவும், தமது சார்பிலும் இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்வதாக சின்னம்மா குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கும்,  இந்திய
​தேசம்  வல்லரசு ஆவதற்கும் தங்கள் பயணத்தை இனிதே தொடர எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார். 

Night
Day