பயணிகளை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டிய நேரக்காப்பாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பயணிகளை அநாகரிகமான வார்த்தைகளால் திட்டிய கடலூர் பேருந்து நிலைய நேரக்காப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலூரில் இருந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்காக கடலூர் பேருந்து நிலையத்தில் ஏரளாமான பயணிகள் காத்திருந்துள்ளனர். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாகியும் சென்னை செல்வதற்கு பேருந்துகள் இயக்கப்படாததால் அவதியடைந்த பயணிகள் இதுகுறித்து நேரக்காப்பாளர் புருஷோத்தமன் என்பவரிடம் கேட்டுள்ளனர். அப்போது பயணிகளை, புருஷோத்தமன் அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியுள்ளார். தொடர்ந்து பயணிகள் அவரை சூழ்ந்ததால் புருஷோத்தமன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களும், பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day