ஏரியில் 9 நவக்கிரக கற்சிலைகள் கண்டெடுப்பு..!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடலூர் மாவட்டம், காட்டுக்கூடலூர் ஏரியில் 9 நவக்கிரக கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. காட்டுக்கூடலூர் பகுதியில் உள்ள ஏரியில் சிலர் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது மனோகரன் என்பவர் காலில் ஏதோ கல் ஒன்று தென்பட்டுள்ளது. அப்போது, நீரில் மூழ்கி பார்த்தபோது ஒரே இடத்தில் 9 நவக்கிரக கற்சிலைகள் மூழ்கிக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கரைக்கு எடுத்து வந்த மக்கள் பழமை வாய்ந்த சிவன் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனர். மேலும், சிலைகளை குறித்து காவல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day