எழுத்தின் அளவு: அ+ அ- அ
வெளி மாவட்டங்களில் இருந்து ஆம்னி பேருந்துகளில் சென்னைக்கு வரும் பயணிகளை கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விடப்பட்டதால் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை அடுத்த கிளம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம், அவசர கதியில் திறக்கப்பட்டதால் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இன்று முதல் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், வெளி மாவட்டங்களில் இருந்து ஆம்னி பேருந்துகளில் சென்னைக்கு வரும் பயணிகள் கோயம்பேடு சென்றடைய டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால், அவர்களை கிளாம்பாக்கத்திலேயே இறக்கிவிட்டதால் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகினர். இதுகுறித்து, பயணிகள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் கேட்டபோது முறையாக பதிலளிக்காமல், தரக்குறைவாக பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.