தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெரினாவில் கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்காட்டாயமாக கைது செய்து அடக்குமுறையை கையாண்டனர்.

தூய்மைப் பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தூய்மைப் பணியாளர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை நிறைவேற்றாத விளம்பர திமுக அரசின் கையாலாகாதனத்தை கண்டித்தும், போலீசாரின் அராஜகத்தை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

அமைதி வழியில் போராடிய தூய்மைப் பணியாளர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். போராடிய தூய்மைப்பணியாளர்களை போலீசார் தரதரவென இழுத்துச் சென்று வாகனத்தில் ஏற்றி அராஜகத்தில் ஈடுபட்டனர்.

அப்போது 3 தூய்மைப் பணியாளர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் போலீசார் அவர்களை கைது செய்தனர். 

Night
Day