திருவாரூரில் கனமழை - நீரில் மூழ்கிய 9 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சுமார் 9 ஆயிரம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஆறுகள், பாசன வாய்க்கால்களில் முறையாக தூர்வாராமல் ஊழல் முறைகேடு செய்ததன் விளைவால் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் மூழ்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உடனடியாக வயல்வெளிகளில் தேங்கிய மழைநீரை வடியவைத்து பயிர்களை பாதுகாக்கவேண்டும் எனவும், தற்போது  ஏற்பட்டுள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

varient
Night
Day